பட்டா வழங்குவதில் காலதாமதம் பொதுமக்கள் புகார்
ஆவடி தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்குவதில் காலதாமதம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தாலுகாவில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி பிரிக்கப்பட்டு ஆவடி தாலுகா உதயமானது. இதில், திருமுல்லைவாயல், ஆவடி, பருத்திப்பட்டு, கோவில்பதாகை, வெள்ளானூர், மோரை, வீராபுரம், கொள்ளுமேடு, திருநின்றவூர், பட்டாபிராம், நடுகுத்தகை, நெமிலிச்சேரி, பொத்தூர் ஆகிய ஊர்கள் அடங்கும்.
இந்த தாலுகா அலுவலகம் ஆவடி நகராட்சி வளாகத்தில் இயங்கி வருகிறது. இடப்பற்றாக்குறை காரணமாக தாலுகா அலுவலகத்துக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்காக பட்டாபிராம் இந்து கல்லூரி அருகே இடம் ஒதுக்கப்பட்டு, கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.
ஆவடி தாலுகா பகுதியில் புதிதாக நிலம் வாங்குபவர்களும், பழைய பட்டாக்களில் பெயர் மாற்றம் செய்வதற்காகவும் பலர் தாலுகா அலுவலகத்துக்கு தினசரி வருகின்றனர். ஆனால் இங்கு முறையாக பட்டாக்கள் வழங்கப்படாததுடன், பெயர் மாற்றமும் செய்துதரப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
புதிய பட்டாவுக்கு விண்ணப்பித்து பட்டா கிடைக்காத சிலர் தாலுகா அலுவலக அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை.
சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி தாலுகா பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இங்கு இடம் வாங்குபவர்களுக்கு முறையாக பட்டா வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக விண்ணப்பித்த தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் இங்கு இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. ஆவடி பகுதியில் வீடு கட்ட இடம் வாங்குவது மிகவும் சிரமம். ஆனால் அதைவிட பட்டா வாங்குவது மிகுந்த சிரமமாக உள்ளது.
உரிய காலத்தில் பட்டா கிடைத்தால் தான் வீடு கட்டுவதற்குரிய உரிமம் பெற விண்ணப்பிக்க முடியும். அதேபோல் வங்கி கடன் வாங்குவதாக இருந்தாலும் பட்டா அவசியம். இதனால் தினசரி பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆவடி தாசில்தாரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் புகார் அளிக்க முடிவு செய்து உள்ளோம்.
ஆவடி தாலுகா அலுவலகத்துக்கு பட்டா வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு பட்டாக்களை ஆன்-லைன் மூலம் வழங்க வேண்டும் என்று அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் ஆவடி தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் ஆன்-லைன் மூலம் வழங்காமல் பழைய முறையிலேயே பட்டா வழங்கப்படுகிறது. இதனால் முறைகேடுகள் நடப்பதற்கு வழி ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவடி தாலுகாவில் முறையாக பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் செய்வது, அலைக்கழிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story