சரத்பவார் எப்போதும் சாதி அரசியலுக்கு ஆதரவளிப்பவர் சிவசேனா சொல்கிறது
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் எப்போதும் சாதி அரசியலுக்கு ஆதரவளிப்பவர் என்று சிவசேனா கூறியுள்ளது.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், சமீபத்தில் புனேயில் அளித்த பேட்டி ஒன்றில் இடஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், “ஏற்கனவே தலித் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வேறு சில சமுதாயத்தினரும் இடஒதுக்கீடு கோரி பேரணி நடத்தி வருகின்றனர். என்னை பொறுத்தவரை சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட கூடாது. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற இட ஒதுக்கீடு சலுகைகள் கிடைக்கப்பெறவேண்டும்” என்றார்.
இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
சரத்பவார் மராட்டிய மக்களால் அதிகம் மதிக்கப்படுகிறார். தேசிய அளவிலும் அவர் மீது நல்ல மதிப்பு உள்ளது. ஆனால் அவர் அரசியல் ரீதியாக ஒருபோதும் நிலையான முடிவுகளை எடுத்த தில்லை. அவர் எப்போதும் சாதி ரீதியான அரசியலுக்கு ஆதரவளிப்பவர்.
அஜித்பவார் உள்பட எத்தனையோ தலைவர்கள் மராத்தா மக்களின் பேரணியில் ஒரு அங்கமாக செயல்பட்டுள்ளனர். சரத்பவார் கூட மராத்தா மக்களின் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு ஏற்கனவே தன் ஆதரவை தெரிவித்துள்ளார். ஏன் அந்த நிலைபாட்டை புனேயில் அளித்த பேட்டியின் போது மாற்றிக்கொண்டார்?
சரத்பவார் தனது பரந்த அரசியல் அனுபவத்திற்காக அனைவராலும் மதிக்கப்படுபவர். தற்போது எடுத்துள்ள நிலைபாட்டிலாவது அவர் தொடர்ந்து தாக்குப்பிடிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story