பாதாமின் நற்பலன்கள்
பாதாம் பருப்பு பல நற்பலன்களைத் தருகிறது. அதிலும் தினமும் பாதாமை நீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் நன்மை அதிகம் என்கிறார்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள்.
பாதாமை நீரில் ஊறவைக்கும்போது, அதிலிருந்து ‘லிபேஸ்’ என்ற நொதி வெளியிடப்படுகிறது. இந்த நொதியானது, செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. பாதாமை நீரில் ஊறவைத்துச் சாப்பிடும்போது, கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நீரில் ஊறவைத்த பாதாமை சாப்பிடும்போது, ரத்தத்தில் உள்ள ‘ஆல்பா டோகோபெரல்’ என்ற வேதிப்பொருள் அதிகரித்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
பாதாமில் ‘மோனோ அன்சாச்சுரேட்டட்’ கொழுப்பு உள்ளது. இது நீண்டநேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டம் குறைந்து, உடல் எடையும் வேகமாகக் குறையும்.
நீரில் ஊற வைத்த பாதாமில் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் அதிகம். அவை நச்சுக்கழிவுகளை எதிர்த்து, விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கும்.
Related Tags :
Next Story