விவசாய கடன் வழங்க வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் கலெக்டர் வெங்கடேஷ் பேச்சு


விவசாய கடன் வழங்க வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் கலெக்டர் வெங்கடேஷ் பேச்சு
x
தினத்தந்தி 25 Feb 2018 3:00 AM IST (Updated: 24 Feb 2018 5:39 PM IST)
t-max-icont-min-icon

விவசாய கடன் வழங்க வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் வெங்கடேஷ் கூறினார்.

தூத்துக்குடி,

விவசாய கடன் வழங்க வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் வெங்கடேஷ் கூறினார்.

வங்கியாளர்கள் கூட்டம்


தூத்துக்குடி மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, 2018–19–ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசினார். முன்னோடி வங்கி மேலாளர் ரவி, ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஜயபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தின் ஊரக வளர்ச்சி பணியில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி) முக்கிய பங்கு வகிக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.7 ஆயிரத்து 229 கோடியே 44 லட்சம் அளவுக்கு கடன் வழங்க மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

உறுதுணையாக..

கூட்டத்தில், கலெக்டர் வெங்கடேஷ் பேசும் போது, விவசாயத்தில் நீண்டகால கடன் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்த திட்ட அறிக்கை விளக்குகிறது. இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும். வேளாண்மையில் எந்திரமயமாக்கல் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்து, விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவும். வங்கிகள் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் வங்கி மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story