தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
தத்தளிப்பு
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரின்சோ (வயது 30). இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் கடந்த 22–ந் தேதி அதே பகுதியை சேர்ந்த சகாயராஜ் (32), மெஸ்ரின் (45), புஷ்பராஜ் (48), பிரசாத் (35), அண்டோ (34), ராபின் (28) ஆகிய 7 பேரும் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் நேற்று முன்தினம் மாலையில் மணப்பாட்டில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, படகு என்ஜின் திடீரென பழுதடைந்தது. இதனால் படகில் இருந்த 7 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்து கொண்டு இருந்தனர்.
மீட்பு
இதுகுறித்து தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தூத்துக்குடி கடலோர காவல்படை ரோந்து கப்பல் ஆதேஷ் விரைந்து சென்றது. அங்கு கடலில் தத்தளித்து கொண்டு இருந்த 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
படகையும் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். மீனவர்கள் 7 பேரும் நேற்று மதியம் தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story