ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2018 2:30 AM IST (Updated: 24 Feb 2018 6:06 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

ஜெயலலிதா பிறந்த நாள்

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி தலைமையில் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்பாட்டில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடந்தது.

அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மகன் கே.அருண்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் வேலுமணி, அலங்கார பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு உதவிகள்

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு மின்வாரிய அண்ணா தொழிற்சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில், டிபன் பாக்ஸ் வழங்கினர். மின்வாரிய அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி ஸ்டாலின் காலனியில் அண்ணா துப்புரவு தொழிற்சங்கம் சார்பில், ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆத்தூர்–ஆறுமுகநேரி


ஆத்தூரில் தினகரன் அணி சார்பில் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. ஏழைகளுக்கு தையல் இயந்திரம், சைக்கிள், டீ கேன் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆறுமுகநேரியில் அ.தி.மு.க. நகர செயலாளர் அரசகுரு தலைமையில் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ராஜமன்யபுரம் முதியோர் இல்லத்தில் காலை உணவும், சீனந்தோப்பு சிறுவர் இல்லத்தில் மதிய உணவும் வழங்கப்பட்டது.

ஆறுமுகநேரி ரெயில் நிலையம் அருகில் தினகரன் அணி நகர அலுவலகத்தை ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் திறந்து வைத்தார். பின்னர் அவர் அங்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

காயல்பட்டினம்

காயல்பட்டினத்தில் அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் காயல் மவுலானா தலைமையில், ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story