நெல்லையில் ஜெயலலிதா பிறந்தநாளை அ.தி.மு.க.வினர் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்


நெல்லையில் ஜெயலலிதா பிறந்தநாளை அ.தி.மு.க.வினர் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2018 2:30 AM IST (Updated: 24 Feb 2018 8:21 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா பிறந்தநாளை நெல்லையில் அ.தி.மு.க.வினர் அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள்.

நெல்லை,

ஜெயலலிதா பிறந்தநாளை நெல்லையில் அ.தி.மு.க.வினர் அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள். பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டது.

பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 70–வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை முன்பு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு மாநகர் மாவட்ட பொருளாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தங்கமோதிரம்

இதைத்தொடர்ந்து நெல்லை சரணாலயம், பி‌ஷப் சார்ஜெண்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி ஆகியவற்றில் உள்ள குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, தச்சநல்லூர் ஆரம்ப சுகாதர நிலையம் ஆகிய ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது.பாளையங்கோட்டை சேக் சிந்தா மதார் பள்ளிவாசலில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.

 நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி கூடம் அருகிலும், நெல்லையப்பர் கோவிலிலும், வண்ணார்பேட்டை பேராச்சிஅம்மன் கோவிலிலும், காந்திமதிஅம்பாள் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்திலும் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க.வினர் அன்னதானம் வழங்கினார்கள். நெல்லை டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய இடங்களில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 இந்த நிகழ்ச்சிகளில் மாநகர் மாவட்ட அவைதலைவர் பரணிசங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, இலக்கிய அணி மாவட்ட தலைவர் பழனிவேல்பாண்டியன், சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், பகுதி செயலாளர்கள் மோகன், தச்சை மாதவன், கிருஷ்ணமூர்த்தி, ஹயாத், சூப்பர்மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story