தென்னையில் இருந்து நீரா பானம் எடுக்க விரைவில் அனுமதி: கலெக்டர் நடராஜன் உறுதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் தென்னையில் இருந்து நீரா பானம் எடுக்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் நடராஜன் விவசாயிகளிடம் உறுதி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அப்துல் முனாப், செயலாளர் மணிமாதவன், பொருளாளர் மோகன், துணை தலைவர் அபுதாகீர் மற்றும் நிர்வாகிகள் ரகுமத்துல்லா, கருப்பையா, பாலுச்சாமி மற்றும் மாநில தென்னை உற்பத்தியாளர் கூட்டமைப்பு செயலாளர் செல்லத்துரை மற்றும் விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் தென்னைக்கு வறட்சி நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பை வருகிற 28-ந்தேதிக்குள் மாநில வேளாண்மை துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் மற்ற மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூட்டுப்பண்ணை திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகளை ஒருங்கிணைத்து தென்னை உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பை உருவாக்கி தென்னையில் இருந்து நீரா பானம் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் நீரா பானம் எடுக்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Related Tags :
Next Story