நீர்வரத்து ஏற்பட்டதால் சுருளி அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் சுருளி அருவி சிறப்பு பெற்று விளங்குகிறது. இந்த அருவிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் அருவியில் நீராடி விட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.
சுருளி அருவிக்கு ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து அடர்ந்த மலைபகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து உபரிநீர் வருகிறது. கோடை காலத்திலும் அருவியில் நீர் வற்றாமல் வந்து கொண்டு இருந்தது. கடந்த ஆண்டு தூவானம் ஏரியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
இதனால் அருவிக்கு வரும் உபரி நீர் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து சுருளி அருவிக்கு மழை பெய்தால் மட்டுமே நீர் வரத்து என்ற நிலை உருவானது.
இந்த நிலையில் கடந்த மாதம் வனம் மற்றும் சுற்றுச்சூழல் இயற்கை ஆர்வலர்கள் சுருளி அருவியில் நீர்வரத்து இல்லாவிட்டால் அடர்ந்த மலைப்பகுதியில் வாழும் வனவிலங்குகள், விலை உயர்ந்த அபூர்வ மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் தண்ணீர் இன்றி பாதிக்கப்படும்.
பல ஆண்டுகாலமாக ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக திறக்கப்படும் தண்ணீரை கடந்த ஆண்டு நிறுத்தி விட்டனர்.
எனவே பழைய வழக்கத்தை மாற்றாமல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இதனை அடுத்து மணலாறு அணையில் இருந்து வினாடிக்கு 6 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுருளி அருவிக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

Related Tags :
Next Story