கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பயங்கர தீ
கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
கோவை,
கோவை நகரில் உள்ள 100 வார்டுகளிலும் தினமும் சேரும் 1,100 டன் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. மொத்தம் 686 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பை கிடங்கில் கடந்த 13 ஆண்டுகளாக கொட்டப்பட்டுள்ள 18 லட்சம் டன் குப்பைகளில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு சுற்றுப்புற பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ஒரு பகுதியில் சேர்ந்த குப்பைகள் மணலால் மூடப்பட்டு இருந்தாலும், மீண்டும், மீண்டும் கொட்டப் படும் குப்பைகளில் மழைக்காலங்களில் கழிவு நீர் தேங்கி, ஈ, கொசுக்கள் பரவி அங்குள்ள ஊர் மக்க ளுக்கு சுகாதார பாதிப்பு ஏற்பட்டு வந்தது. எனவே இந்த குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மகாலிங்கபுரம் எல்லைப்பகுதியில் குப்பை கிடங்கில் திடீரென்று தீப்பிடித்தது. வெயிலில் குப்பைகள் காய்ந்த நிலையில் இருந்ததால் தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
சிறிது நேரத்தில் வானை தொடும் அளவில் புகை மூட்டம் ஏற் பட்டு சுற்றுப்புற பகுதிகளுக்கு பரவியது. சூரிய ஒளியை புகைமண்டலம் மறைத்ததால், சூரியன் இளஞ்சிவப்பு நிறத்தில் மங்கலாக காணப்பட்டது. வெயில் வெளுத்து வாங்கும் இப்போதைய நேரத்தில் சூரியனை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் மேக மூட்டம் போல புகை ஆக்கிரமித்ததால் அதனூடே சூரியன் இளஞ்சிவப்பு நிறத்தில் தெரிந்தது.அது பவுர்ணமி நிலவை பார்ப்பது போல வித்தியாசமான காட்சியாக இருந்தது என்று அந்த பகுதியினர் கூறினர். தொடர்ந்து காற்று வீசியதால், குப்பை கிடங்கை சுற்றியுள்ள மகாலிங்கபுரம், எல்.ஜி.நகர், கோணவாய்க் கால்பாளையம், மதுக்கரை, ஈச்சனாரி பகுதியை நோக்கி புகை மூட்டம் பரவி குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் சுவாச கோளாறு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் கோவை தெற்கு, வடக்கு, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், பல்லடத்தில் இருந்தும் 8 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க போராடினார்கள். ஆர்.ஏ.எப். அதிரடிப்படை பயிற்சி மையத்தில் உள்ள தீயணைப்பு வாகனமும் தீயை அணைக்க அனுப்பி வைக்கப்பட்டது. இதுதவிர போலீசாரின் ‘வஜ்ரா’ வாகனமும், மாநகராட்சி சார்பில் உள்ள தண்ணீர் லாரிகளும் தீயணைப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டன. ஆனாலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இரவிலும் தீ எரிந்துகொண்டே இருந்தது.
இது குறித்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கை பராமரிக்கும் மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-
தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. குப்பைகள் அதிகம் சேரும்போது மீத்தேன் வாயு உருவாகி தீப்பிடித்து இருக்கலாம். தீபாவளி பண்டிகையின்போது கொட்டப்பட்ட பட்டாசு கழிவு குவியலில் தீப்பிடித்து மேலும் பரவியதாக தெரிகிறது. யாரும் தீ வைக்கவில்லை. தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story