குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தர்மபுரி மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மாதையன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன், மாநில நிர்வாகிகள் தாமரைச்செல்வன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். வருகிற 1-ந்தேதி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை தர்மபுரி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும். இதையொட்டி அனைத்து கிராமங்களிலும் கட்சியின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பும், மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்க வேண்டும். ரத்ததானம், கண்தானம் செய்வதோடு பொதுக்கூட்டங்களையும் சிறப்பாக நடத்த வேண்டும்.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். வருகிற மார்ச் மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் நடைபெறும் மண்டல மாநாட்டில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, வக்கீல் அணி மாவட்ட நிர்வாகி மணி, ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், சேட்டு, அன்பழகன், செல்வராஜ், மாவட்ட நிர்வாகிகள் தங்கமணி, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பொன்மகேஸ்வரன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story