குந்தாரப்பள்ளியில் எருது விடும் விழா 5 பேர் காயம்
குந்தாரப்பள்ளியில் எருது விடும் விழா நடந்தது. காளை முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளியில் எருது விடும் விழா நேற்று நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. இதில் போட்டி தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்து செல்லும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
அதன்படி போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மோட்டார்சைக்கிள், தங்க காசு, டி.வி., குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின் உள்பட 28 பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வேப்பனப்பள்ளி முருகன் எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் காளைகள் முட்டியதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விழாவை காண கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் அல்லாது அருகில் உள்ள ஆந்திர மாநிலம் குப்பம், கர்நாடக மாநிலம் போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். இதனால் அந்த பகுதியே விழாக்கோலமாக காட்சி அளித்தது.

Related Tags :
Next Story