ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான போட்டி தேர்வை 2,593 பேர் எழுதினர்
திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான போட்டி தேர்வை 2,593 பேர் எழுதினர்.
திருச்சி,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான போட்டி தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி திருச்சி மாவட்டத்திலும் இத்தேர்வு நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 356 பேர் இந்த போட்டி தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
தேர்வு எழுதுவதற்காக திருச்சி மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் தேர்வு மையங்களில் 15 அறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களில் 1,763 பேர் தேர்வு எழுத விரவில்லை. இதனால் மொத்தம் 2,593 பேர் போட்டி தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களை கண்காணிக்க 15 முதன்மை கண்காணிப்பாளர்கள் உள்பட அலுவலர்கள் பலர் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் அவ்வப்போது தேர்வு அறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் தேர்வு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற்றதை வீடியோ பதிவு செய்யப்பட்டது. ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தை கலெக்டர் ராஜாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Tags :
Next Story