நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் கேட்கும் பணியாளர்கள் மீது புகார் தெரிவிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் கேட்கும் பணியாளர்கள் மீது புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் சாந்தா தகவல்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 2017-2018-ம் ஆண்டில் காரீப் பருவத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகளின் நெல்லிற்கான ஆதார விலையாக மத்திய அரசு அறிவித்துள்ள கிரேடு “யு” ரகத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,590-ம், பொது ரகத்திற்கு ரூ.1,550-ம், தமிழக அரசின் பங்களிப்பு ஊக்கத் தொகையாக குவிண்டாலுக்கு கிரேடு “யு” ரூ.70-ம், பொது ரகத்திற்கு ரூ.50-ம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் கிரேடு “யு” ரகத்திற்கு குவிண்டால் விலை ரூ.1,660-ம், பொது ரக நெல்லிற்கு ரூ.1,600-ம் வழங்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 202 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் மின்னணு பணபரிவர்த்தனை மூலம் வரவு வைக்கப்பட்டு கொள்முதல் நிலையங்களில் பண பரிமாற்றம் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பணமோ அல்லது நெல்லோ கொடுக்க தேவையில்லை. மேற்படி கையூட்டு கேட்கும் பணியாளர்கள் மீது புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கொள்முதல் பணியாளர்கள் பணம் கேட்டால் துணை மண்டல மேலாளரை 9443139926 என்ற செல்போன் எண்ணிலும், துணை மேலாளரை (தரக்கட்டுப்பாடு) 9894048098 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story