மாணவ-மாணவிகளின் கற்றல் அடைவுத்திறன் குறித்து ஆய்வுக்கூட்டம்
மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவுத்திறன் குறித்து கல்வி அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் நந்தகுமார் தலைமையில் நடந்தது.
பெரம்பலூர்,
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலைப் பள்ளிகளில் ஒன்றியத்திற்கு இரண்டு பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு இணை இயக்குனர்கள், மாநில உதவி ஒருங்கிணைப்பாளர்கள், பல்வேறு மாவட்ட உதவித் திட்ட அலுவலர்கள் மற்றும் இடைநிலைக் கல்வி உதவி திட்ட அலுவலர்கள் ஆகியோரை கொண்ட குழு கடந்த 22-ந்தேதி அன்று பள்ளிகளை ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுடைய கற்றல் அடைவுத்திறன் குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தனர். இதன் அடிப்படையில் மாணவ, மாணவிகளுடைய கற்றல் அடைவுத்திறன் குறித்து கல்வி அதிகாரிகளுடன் மாநில அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் நந்தகுமார் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பள்ளிகளை சார்ந்த உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் தொடர்புடைய ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடைமுறையில் இருக்கும் எளிய முறையிலான படைப்பாற்றல் கல்வி மற்றும் படைப்பாற்றல் கல்வி முறை ஆய்வு, மாணவர்களுடைய கற்றல் கற்பித்தல் சார்ந்த வகுப்பறை செயல்பாடுகள், மாணவர்களுடைய கல்வி முன்னேற்ற அடைவு நிலை ஒப்பீடு மீளாய்வு, கணித மற்றும் அறிவியல் உபகரணப்பெட்டி பயன்பாடு, மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும், இந்த பள்ளி ஆய்வானது வருகிற ஜூலை மாதத்தில் நடைபெறும் எனவும் அதற்குள் கண்டறியப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து மாணவர்களுடைய கல்வித்தர முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டுமென மாநிலத்திட்ட இயக்குனர் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் இணை இயக்குனர்கள் ராதாகிருட்டிணன், சுகன்யா, பெரம்பலூர் மற்றும் அரியலூர் முதன்மைக்கல்வி அலுவலர்கள் அருள்மொழிதேவி மற்றும் புகழேந்தி, பெரம்பலூர் உள்பட கல்வி அதிகாரிகள் தொடர்புடைய பள்ளி தலைமையாசிரியர்கள், மாவட்ட ஆய்வாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story