‘மினி’யின் பட்டம் பறக்கிறது..
பட்டம் பறக்கவிடுவது சர்வதேச அளவில் திருவிழாவாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் கலந்துகொண்டு உலக அளவில் பலரையும் கவர்ந்து வருகிறார், மினி நாயர்.
பட்டம் பறக்கவிடுவது சர்வதேச அளவில் திருவிழாவாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் கலந்துகொண்டு உலக அளவில் பலரையும் கவர்ந்து வருகிறார், மினி நாயர். இத்தகைய பட்டத் திருவிழாக்களில் ரஷிய பெண்கள்தான் அதிக அளவில் பங்கேற்கிறார்கள். ‘இந்திய பெண்கள் ஏன் அதிக அளவில் சர்வதேச திருவிழாக்களில் கலந்துகொண்டு பட்டம் விடுவதில்லை?’ என்று ரஷிய பெண் ஒருவர் மினியிடம் கேட்ட கேள்விதான் அவரை இந்த துறைக்குள் முழுஈடுபாடுகாட்ட தூண்டியிருக்கிறது.
‘‘நான் பிராக் அணிய தொடங்கிய சிறு வயதில் என் அண்ணனுடன் அறுவடை செய்த வயல் வெளிகளில் பட்டம் பறக்கவிடுவதற்காக செல்வேன். பொதுவாக ஆண்கள்தான் அதிகமாக பட்டம் விடுவார்கள். அதனால் என்னை பட்டம் விட அனுமதிக்கமாட்டார்கள். நான் அடம் பிடித்து பட்டத்தை வாங்கி பறக்க விடுவேன். கையில் நூலை பிடித்து லாவகமாக பட்டம் விடுவதற்கு அப்போதே கற்றுக்கொண்டேன். சில சமயங்களில் நான் விடும் பட்டம் மரக்கிளையில் சிக்கி விடும். அதனை எடுத்து தருமாறு அடம்பிடித்து அழுவேன். என் அண்ணனுடன் பட்டம் விடுபவர்கள் மரத்தில் ஏறி எடுத்து தருவார்கள். சில சமயம், ‘வேறு பட்டம் வாங்கி கொள்ளலாம்’ என்று கூறிவிடுவார்கள்.
சிறு வயதில் தென்னை ஓலை துடைப்பக் குச்சி, பேப்பர் கொண்டு பட்டங்களை தயார் செய்ய ஆரம்பித்தேன். பெரிய பாலமோ, வீடோ கட்டுவது போல் பட்டத்தை கவனமாக பார்த்து, பார்த்து உருவாக்குவேன். அந்த சமயங்களில் கலர் பட்டங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஜவுளி கடைகளுக்கு செல்லும்போது மாத காலண்டர்கள் கொடுப்பார்கள். அதை கிழித்து கலர் பட்டங்கள் தயாரிப்போம். அதன் மீது கலர் பேப்பர்களை ஒட்டி அழகுப்படுத்துவோம்’’ என்று தனது சிறு வயது நினைவுகளை அசைபோடுகிறார்.
மினி நாயர் கேரள மாநிலத்திலுள்ள வடகரா பகுதியை சேர்ந்தவர். அவருக்குள் துளிர்விட்ட பட்டம் விடும் ஆர்வம், உயர்கல்வி பயில தொடங்கியபோது அவரைவிட்டு படிப்படியாக விலக தொடங்கி இருக்கிறது. படிப்பை முடித்ததும் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணிபுரிந்திருக்கிறார். அதன் பிறகு ரேடியோ நிலையத்தில் ரேடியோ ஜாக்கியாக மாறியிருக்கிறார். பின்னர் தலைமை நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆனார். குடும்ப வாழ்க்கையும் இனிமையாக நகர்ந்திருக்கிறது. ஒருமுறை மகனுடன் கடற்கரைக்கு சென்றபோது அங்கு விதவிதமான பட்டங்கள் பறப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறார். அது அவருக்குள் பழைய நினைவுகளை மலரச் செய்திருக்கிறது.
‘‘சர்வதேச பட்டம் விடும் திருவிழாவின் ஒரு பகுதியாக அங்கு பட்டங்கள் வான வெளியை அலங்கரித்துக்கொண்டிருந்தது. பல நாடுகளை சேர்ந்தவர் களையும் அங்கு பார்த்தேன். அவர்களின் பட்டங்கள் சிறகடித்துக்கொண்டிருந்ததை பார்த்ததும் ஏதோ அதிசயத்தை பார்த்த பிரமிப்பு எனக்கு தோன்றியது. ஏனெனில் பேப்பரில் மட்டுமே பட்டங்களை பார்த்து பழகிய என் கண்களை விதவிதமான பட்டங்கள் வியக்கவைத்தன. அப்போதே மீண்டும் பட்டங்கள் விடும் ஆசை எனக்குள் எழத்தொடங்கியது’’ என்கிறார்.
பட்டங்கள் மீதான மோகத்தில் இருந்த மினி நாயர் இந்தியாவில் பட்டம் விடும் குழுவை சேர்ந்த அப்துல்லா என்பவரை சந்தித் திருக்கிறார். ரேடியோ ஜாக்கியாக இருந்ததால் அவரோடு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருக்கிறார். அப்போது அப்துல்லா பட்டம் விடும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள மினி நாயருக்குள் பட்டம் விட்ட பால்ய ஞாபகம் பட்டாம் பூச்சியாக சிறகடித்து பறந்திருக்கிறது. தனது விருப்பங்களை கூற அப்துல்லா அவருடைய வாட்ஸ் அப் குழுவில் மினி நாயரை இணைத்திருக்கிறார்.
‘‘வாட்ஸ் அப் குழுவில் நான் மட்டும்தான் பெண். பட்டம் விடுவது ஒரு கலை என்பதை அந்த குழுவில் இணைந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். இரும்பு, கம்புகளில் கூட பட்டங்களை விடலாம் என்பதையும் அறிந்து கொண்டேன். கலர் கலர் துணிகளை இணைத்தும் அற்புதமாக பட்டங்களை உருவாக்குகிறார்கள். சர்வதேச அளவில் நடை பெறும் திருவிழாக்களில் பெண்கள் அதிகம் கலந்து கொள்ளாததற்கான காரணங்களை அறிய முயற்சித்தேன். அவர்களால் வெயிலில் நிற்க முடிவதில்லை என்பதுதான் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது’’ என்கிறார்.
பெண்களுக்குள் பட்டம் விடும் ஆர்வத்தை உருவாக்க இன்கிரிடபிள் இந்தியா என்ற பெண்களுக்கான குழுவை உருவாக்கி இருக்கிறார், மினி. அந்த குழுவுடன் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முதல் முதலாக பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொள்ள குஜராத் சென்றிருக்கிறார். அகமதாபாத்தில் நடந்த அந்த போட்டியில் 30 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். அதில் இவருடைய குழுவினர் மட்டும் ஒரே மாதிரியான சீருடை உடுத்தி தனித்துவமாக தெரிந்திருக்கிறார்கள்.
‘‘ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள சென்றது போல் நாங்கள் உற்சாகமாக இருந்தோம். போட்டி முடிவில் எங்களுக்கு ‘கைட் எக்செலென்ட்’ என்ற விருது கிடைத்தது. அந்த விழாவில் விருது கிடைத்தது என்பது பெரிய விஷயமில்லை. அதில் பங்கேற்பவர்களாக இருப்பதே பெரிய வெற்றிதான். அங்கு வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ‘ஸ்டால்’ போட்டிருந்தார்கள். அவர்கள் கைவண்ணத்தில் தயாரான விதவிதமான பட்டங்களை விற்பனை செய்தார்கள். அவற்றின் விலை லட்சம் ரூபாய் வரை இருந்தது. பட்டம் என்றால் சதுரமோ, செவ்வக வடிவமோதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் வட்டம், நீள்சதுரம் என விதவிதமாக எப்படி வேண்டுமானாலும் உருவாக்கலாம்’’ என்கிற மினி நாயர், வெளிநாட்டவர்களின் பட்டங்கள் தயாரிப்பு முறையை பார்த்து அதுபோல் விதவிதமான பட்டங்களை தயாரிக்க முயற்சி எடுத்திருக்கிறார்.
ராஜேஷ் நாயர் என்பவரின் வழிகாட்டுதலில் இவருடைய பட்டங்கள் புதுபுது அவதாரங்களை எடுத்திருக்கிறது. முதல் பட்டத்தை 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய் திருக்கிறார். அதை உருவாக்குவதற்கு இரண்டு வாரம் ஆகி இருக்கிறது. பெண்கள் மத்தியில் பட்டம் விடும் வழக்கத்தை அதிகப்படுத்துவதற்காக கிளப் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார்.
கோவாவில் நடந்த பட்டம் விடும் திருவிழாவில் தன்னுடைய கைவண்ணத்தில் தயாரித்த பட்டத்துடன் போட்டியில் பங்கேற்றிருக்கிறார். அங்கு இவருடன் சேர்த்து மொத்தம் 3 பெண்களே கலந்து கொண்டிருக்கிறார்கள்.
‘‘வெளிநாட்டு பெண்கள் பட்டம் விடும் விழாக்களில் உற்சாகத்தோடு பங்கேற்கிறார்கள். அதனை தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக கருதுகிறார்கள். தினமும் பட்டம் விடுவதற்காக குறிப்பிட்ட நேரத்தை செலவிடுகிறார்கள். கடற்கரை பகுதிதான் பட்டம் விடுவதற்கு ஏற்ற இடம். அதிலும் நீளமான கடற்கரை கொண்ட பகுதிகளில் சந்தோஷமாக பட்டங்களை பறக்க விடலாம். வெளிநாட்டில் புதிதாக ஒரு பொருளை உற்பத்தி செய்தாலோ அல்லது புதிய நிறுவனம் தொடங்கினாலோ அதை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த பட்டங்களை தயாரித்து பறக்க விடுகிறார்கள். இந்தியாவில் அதனை பரிசோதனை முறையில் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது’’ என்கிறார். இவர் இந்த துறையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு சீனாவில் நடந்த சர்வதேச திருவிழாவில் மினி நாயரால் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக் கிறது. இனி எங்கு பட்டம் விடும் திருவிழா நடந்தாலும் கண்டிப் பாக பங்கேற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக் கிறார். பட்டங்கள் தயார் செய்வது எப்படி? அதனை பறக்க விடுவது எப்படி? என்பது பற்றி பயிற்சி அளிக்கும் திட்டமும் மினி நாயருக்கு இருக் கிறது. பட்டம் விடும் திரு விழாவில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பது மினி நாயரின் விருப்பமாக இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Related Tags :
Next Story