போலீஸ்காரர் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
புதுக்கடை அருகே போலீஸ்காரர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
புதுக்கடை,
புதுக்கடை அருகே கைசூண்டி பகுதியை சேர்ந்தவர் பொன்னையா நாடார் (வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு உள்ள சாலையோரம் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக சரல்முக்கு பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் அருண் (25) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் பொன்னையா நாடார் மீது மோதியது. இதில் இருவரும் சாலையில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் பொன்னையா நாடார் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும், போலீஸ்காரர் அருண் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், பொன்னையா நாடார் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இவருக்கு தங்கம்மா (70) என்ற மனைவியும் 5 மகன்களும் உள்ளனர். மகன்கள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.
படுகாயம் அடைந்த அருணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் நாகர்கோவிலில் ஆயுதப்படை பிரிவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 19 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்தது. இந்த விபத்து குறித்து புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story