திருமுல்லைவாயல் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை தரமணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின்.
ஆவடி,
சென்னை தரமணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 30). தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி லீமா ரோஸ் (25). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3½ வயதில் ஜெசிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த 20-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் சூரப்பட்டு பகுதியில் உள்ள லீமா ரோசின் பெற்றோர் வீட்டிற்கு 3 பேரும் சென்றனர். பின்னர் மனைவி மற்றும் மகளை விட்டுவிட்டு ஜஸ்டின் மட்டும் சென்னை வந்தார்.
இதைத்தொடர்ந்து லீமா ரோஸ், கணவர் வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கிளம்பினார். ஆனால், அவர் கணவர் வீட்டுக்கு செல்லாமல், திருமுல்லைவாயல் பகுதியில் தனக்கு தெரிந்த நபரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார். பின்னர் அவரது வீட்டு ஜன்னல் கம்பியில் நேற்று அதிகாலை லீமா ரோஸ் துப்பட்டாவால் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து சென்று லீமா ரோஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் அம்பத்தூர் ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகிறார்.

Related Tags :
Next Story