பெரும்பாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
பெரும்பாக்கத்தில் குடியிருப்பு பகுதியின் மத்தியில் குப்பைகள் கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது பெரும்பாக்கம், நுக்கம்பாளையம் பகுதிகள். இதில், நுக்கம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரிய வீடுகளும், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளும் அதிகரித்து வருகின்றன.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நுக்கம்பாளையம் இந்திரா நகரில் உள்ள சுடுகாட்டின் ஒரு பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கொட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்திரா நகரில் குப்பைகள் அதிகம் கொட்டப்படுவதால் சுடுகாட்டிற்கு பிணங்களை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, அங்கு கொட்டப்படும் குப்பைகளின் அளவு குறைக்கப்பட்டு பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் பள்ளம் தோண்டி கடந்த 3 மாதங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
குடியிருப்புகளின் மத்தியில் குப்பைகள் கொட்டப்படுவதால், பெரும்பாக்கம் புதுநகர், பிரபு நகர் போன்ற பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியும் அதிகரித்துவிட்டதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும், இங்கு குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட வேண்டும் என பெரும்பாக்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி ஊராட்சி அதிகாரிகள் கூறுகையில், தங்களுக்கு குப்பைகளை கொட்ட மாற்று இடம் இல்லாததால், ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இது தற்காலிகமானது தான்.
குப்பைகளை கொட்ட மாற்று இடம் கேட்டு, மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கேட்டு உரிய ஆவணங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. கலெக்டர் அனுமதி வழங்கினால் குப்பைகள் கொட்டுவது வேறு இடத்திற்கு மாற்றப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story