தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை காஞ்சீபுரம் செல்கிறார்


தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை காஞ்சீபுரம் செல்கிறார்
x
தினத்தந்தி 26 Feb 2018 4:30 AM IST (Updated: 25 Feb 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை காஞ்சீபுரம் செல்கிறார்.

காஞ்சீபுரம்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நாளை (செவ்வாய்க்கிழமை) காஞ்சீபுரம் செல்கிறார். அவரிடம் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நாளை (செவ்வாய்க்கிழமை) காஞ்சீபுரத்துக்கு வருகை தர உள்ளார்.

கவர்னரின் வருகையையொட்டி பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்க விரும்பினால் இன்று (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்காக தனியாக இயங்கும் சிறப்பு கவுண்ட்டரில் கொடுக்கலாம்.

அந்த மனுக்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு, ஒப்புகை சான்று வழங்கப்படும். இந்த மனுக்கள் தமிழக கவர்னரிடம் நேரடியாக கொடுக்கப்பட்ட மனுக்களாக பரிசீலிக்கப்படும்.

நாளை மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை காஞ்சீபுரம் சுற்றுலா மாளிகையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை அளிக்க விருப்பம் உள்ளவர்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற உள்ளார்.

எனவே கவர்னரிடம் கோரிக்கை மனுக்களை வழங்க விருப்பம் உள்ளவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story