ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Feb 2018 4:45 AM IST (Updated: 26 Feb 2018 12:02 AM IST)
t-max-icont-min-icon

ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த 21-ம் தேதி தொடங்கப்பட்ட போராட்டம் கடந்த 4 நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திருக்க வேண்டும்.

அதனை விட்டு விட்டு போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வதும், சிரமத்திற்கு உட்படுத்துவதும், பிறகு விடுதலை செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்து, போராட்டக்காரர்களிடம் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முயற்சித்து, போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டியது தமிழக அரசின் கடமை.

எனவே தமிழக அரசு உடனடியாக காலம் தாழ்த்தாமல் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக ஆக்கப்பூர்வ பேச்சுவர்த்தையில் ஈடுபட வேண்டும். அந்த பேச்சுவார்த்தையின் முடிவானது ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story