ஜெயலலிதா சிலையில் குளறுபடி இல்லை - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
ஜெயலலிதா சிலையில் எந்த குளறுபடியும் இல்லை என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் குலதெய்வ கோவிலில் அவரது இல்ல காதணி விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, ராதாகிருஷ்ணன் எம்.பி., ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திர பிரபா எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர்அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சென்னையில் நிறுவப்பட்ட ஜெயலலிதா சிலை தத்ரூபமாக உள்ளது. அவர் உயிரோடு இருந்திருந்தால் எப்படி எங்களை பார்த்து கை அசைப்பாரோ அதேபோல் உள்ளது. சிலையில் எந்த குளறுபடியும் இல்லை. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் தினகரன் சிலையை பார்த்து விட்டு கருத்து தெரிவிக்கட்டும்.
அ.தி.மு.க. ஆட்சி பலமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். முதல்-அமைச்சரும் துணை முதல்-அமைச்சரும் இணைந்து செயல்படுகின்றனர். இருவருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அ.தி.மு.க.வை தாக்குவதால்தான் பெயர் கிடைக்கும் என்ற நோக்கத்திலும், விமர்சிப்பதால்தான் பா.ஜனதா வளர முடியும் என நினைத்தும் எச்.ராஜா பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story