மாவட்ட செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே லாரி மீது வேன் மோதியது, 10 பேர் படுகாயம் + "||" + Van crashes lorry 10 people were injured

ஆண்டிப்பட்டி அருகே லாரி மீது வேன் மோதியது, 10 பேர் படுகாயம்

ஆண்டிப்பட்டி அருகே லாரி மீது வேன் மோதியது, 10 பேர் படுகாயம்
ஆண்டிப்பட்டி அருகே லாரி மீது வேன் மோதி 10 பே ர்படுகாயம் அடைந்தனர்.
ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு வேனில், தேனி அருகே உள்ள குன்னூர் கிராமத்துக்கு தோட்ட வேலைக்கு சென்றனர்.

வேன் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள கரிசல்பட்டி விலக்கு பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ராயவேலூர் கிராமத்தை சேர்ந்த சின்னம்மாள் (வயது 60), அமுதா (40), நாகம்மாள் (45), பாண்டியம்மாள் (35), பாலக்கோம்பையை சேர்ந்த பார்வதி (55), மாரியம்மாள் (42), சரஸ்வதி (31), ராமுத்தாய் (65), சுப்புலட்சுமி (50) மற்றும் வேன் டிரைவர் மாடசாமி (38) ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர். வேனில் பயணம் செய்த மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பித்தனர். விபத்தில் காயம் அடைந்த அனைவரையும் அங்கிருந்தவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருச்சியை சேர்ந்த கருப்பசாமி (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.