குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக மயிலாடுதுறையில் மினி மாரத்தான் ஓட்டம்


குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக மயிலாடுதுறையில் மினி மாரத்தான் ஓட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2018 4:00 AM IST (Updated: 26 Feb 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் விழுதுகள் இயக்கம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தை மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தொடங்கி வைத்தார். மன்னம்பந்தல் பகுதியில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் 6 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மயிலாடுதுறை டி.இ.எல்.சி. பள்ளியில் முடிவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில், வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்கள் பிரிவில் பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி கீதாஞ்சலியும், ஆண்கள் பிரிவில் கூறைநாடு தனியார் பள்ளி மாணவர் சந்தோஷ்குமாரும் முதலிடம் பெற்றனர். 

Next Story