மாவட்ட செய்திகள்

கடைகளில் பெட்ரோல் விற்ற 3 பேர் கைது + "||" + 3 persons arrested for selling petrol in shops

கடைகளில் பெட்ரோல் விற்ற 3 பேர் கைது

கடைகளில் பெட்ரோல் விற்ற 3 பேர் கைது
கடைகளில் பெட்ரோல் விற்ற 3 பேர் கைது பெட்ரோலையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியில் பெட்டிக்கடை மற்றும் டூவிலர் ஒர்க்‌ஷாப் கடைகளில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், லட்சுமிபிரியா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கீழக்குடிகாட்டை சேர்ந்த ராஜா (வயது 38), தென்கச்சி பெருமாள் நத்தம் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் (58), கீழமிக்கேல்பட்டியை சேர்ந்த ஆரோக்யம் (30) ஆகிய 3 பேரும் உரிமம் இல்லாமல் கடைகளில் பெட்ரோல் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, பெட்ரோலையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.