மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் படுகாயம் கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றவருக்கு வலைவீச்சு + "||" + Motorcycle collision policeman injuries Threatened to the survivor

மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் படுகாயம் கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றவருக்கு வலைவீச்சு

மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் படுகாயம் கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றவருக்கு வலைவீச்சு
கொல்லங்கோடு அருகே வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் படுகாயமடைந்தார். மேலும், போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்ற நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொல்லங்கோடு,

கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றுபவர் கிறிஸ்குமார். இவரும், வேறு சில போலீசாரும் அடைக்காகுழி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக ஒரு மினி டெம்போ வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அதை நிறுத்துமாறு கைகாட்டினர். ஆனால், அந்த டெம்போ நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து கிறிஸ்குமார் மற்றும் போலீசார் அந்த டெப்போவை மோட்டார் சைக்கிளில் துரத்தி செல்ல முயன்றனர்.


மோதல்

அப்போது, மீனச்சல் பகுதியை சேர்ந்த வினோத்குமார், திடீரென மோட்டார் சைக்கிளில் குறுக்கே வந்தார். அவர் கிறிஸ்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் கிறிஸ்குமார் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தொடர்ந்து, வினோத்குமார் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றார். படுகாயம் அடைந்த கிறிஸ்குமார் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து கிறிஸ்குமார் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த  புகாரின் பேரில் வினோத்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். மேலும், வினோத்குமாருக்கும், மினி டெம்போவில் தப்பி சென்றவர்களுக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.