தாம்பரத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


தாம்பரத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 27 Feb 2018 3:15 AM IST (Updated: 26 Feb 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை மற்றும் ரூ.1¼ லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

தாம்பரம்,

மேற்கு தாம்பரம், பாரதிதாசன் நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் கலைநிதி (வயது 32). சானடோரியம் மெப்ஸ் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 24-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கலைநிதி தனது குடும்பத்தினருடன், சமயபுரம் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் அனைவரும் நேற்று காலை வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்துகிடந்தது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த கலைநிதி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்கு உள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.1¼ லட்சம் திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, கலைநிதி தாம்பரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story