திருப்போரூர் அருகே வயலுக்கு சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி


திருப்போரூர் அருகே வயலுக்கு சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி
x
தினத்தந்தி 27 Feb 2018 3:30 AM IST (Updated: 26 Feb 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் அருகே வயலுக்கு சென்ற விவசாயி, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள சிறுங்குன்றம் மேலையூர் கிராமம் நாகாத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி(வயது 45). விவசாயி. தினமும் காலையில் எழுந்ததும் வயலுக்கு செல்வது வழக்கம்.

நேற்று அதிகாலையில் எழுந்த சுப்பிரமணி, வழக்கம்போல் தனது வயலுக்கு சென்றார். அப்போது வயலில் உயர்அழுத்த மின்சார கம்பி அறுந்து கிடந்தது. இதை கவனிக்காமல், அறுந்த கிடந்த மின்வயரை சுப்பிரமணி மிதித்து விட்டார்.

இதில் மின்சாரம் தாக்கியதில், சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதுபற்றி திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பலியான சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story