மாவட்ட செய்திகள்

தனியார் மின் உற்பத்தி ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் + "||" + The siege of the private power plant Public protest and demonstration

தனியார் மின் உற்பத்தி ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தனியார் மின் உற்பத்தி ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி சித்தராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான மின் உற்பத்தி ஆலை உள்ளது.
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி சிப்காட்டை அடுத்த சித்தராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான மின் உற்பத்தி ஆலை உள்ளது. இங்கு நிலக்கரியை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.


இந்த தொழிற்சாலையால் சுற்றியுள்ள கிராமங்களில் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாகவும், காற்று மாசு ஏற்பட்டு கிராம மக்களுக்கு சுவாச பிரச்சினை, தோல் நோய்கள், சிறுநீரக கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகவும் புகார் கூறி மேற்கண்ட ஊராட்சியைச்சேர்ந்த சித்தராஜகண்டிகை, கோபால்ரெட்டி கண்டிகை, பாப்பன்குப்பம், போடிரெட்டி கண்டிகை மற்றும் சிந்தலக்குப்பம் ஆகிய 5 கிராம மக்கள், தனியார் மின் உற்பத்தி ஆலையை மூடக்கோரி நேற்று அந்த ஆலையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துளசிநாராயணன் தலைமை தாங்கினார். மேலும் ஆலை நிர்வாகத்தால் 5 ஏக்கருக்கு மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலம் மற்றும் சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும் கிராம பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு, கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.