லால்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
லால்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் ஹோமங்கள் தொடங்கியது. பின்னர் வாஸ்துசாந்தி, கணபதிஹோமம், முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் 2 மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.
கும்பாபிஷேக நாளான நேற்று காலை 6 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடந்தது.
பின்னர் திருவாரூர் சிவாச்சாரியார் முன்னிலையில் யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று 10 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story