வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இரும்புக்கடை உரிமையாளர் கைது
கந்தர்வகோட்டை அருகே வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இரும்புக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கந்தர்வக்கோட்டை,
கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த மாதம் நள்ளிரவு வங்கியின் சுவற்றை துளையிட்டு ஒரு கும்பல் திருட முயன்றது. இதைக்கண்ட வங்கி காவலரை அந்த கும்பல் தாக்கி விட்டு தப்பிசென்றது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் தலைமையிலான போலீசார் செங்கிப்பட்டி சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இரும்புக்கடை உரிமையாளர்
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதை ஓட்டி வந்த வாலிபர் முண்ணுக்கும், பின் முரணமாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (வயது 47), என்பதும், அவர் தஞ்சாவூரில் பழைய இரும்பு கடை நடத்தி வந்ததும், தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அவரும், அவருடன் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரபாகரன் கூறியதை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து போலீசார் பிரபாகரனை கைது செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவர் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும், சாலையோரங்களில் அவர் திருடிய சோலார் பேட்டரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story