நடிகை ஸ்ரீதேவி மரணம்: அனில் கபூரிடம் நடிகர், நடிகைகள் ஆறுதல்
துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வரப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால், அவரது மைத்துனரான அனில் கபூரை சினிமா நட்சத்திரங்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மும்பை,
துபாயில் நடந்த தனது கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்மாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ந்தேதி இரவு திடீரென மரணம் அடைந்தார்.
ஸ்ரீதேவியின் மரணச் செய்தியை அறிந்ததும் நேற்றுமுன்தினம் காலை முதலே மும்பை அந்தேரி லோகண்ட்வாலாவில் உள்ள அவரது வீட்டு முன் ரசிகர்கள் அதிகளவில் திரண்டனர். ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இரவு வரையிலும் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.
ஆனால் துபாயில் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் தாமதம் காரணமாக இரவு வரையிலும் ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வரப்படவில்லை. இதையடுத்து ஸ்ரீதேவியின் வீட்டு முன் குவிந்து இருந்த ரசிகர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.
ஸ்ரீதேவியின் உடல் நேற்று காலை துபாயில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டு விடும் என்றும், மதியம் இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்றுமுன்தினம் இரவே சென்னையில் இருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்துவிட்டார்.
அவர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். நடிகர் கமல்ஹாசன் நேற்று மாலை விமானத்தில் மும்பை வந்தார். இதேபோல பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் மும்பைக்கு படையெடுத்து வந்தனர்.
ஆனால் நடிகை ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து கொண்டு வரப்படுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று காலையில் இருந்து நடிகை ஸ்ரீதேவியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக மும்பை ஜூகுவில் உள்ள அவரது மைத்துனரும், போனி கபூரின் தம்பியுமான நடிகர் அனில் கபூரின் பங்களா வீட்டுக்கு சினிமா நட்சத்திரங்கள் வர தொடங்கினார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், இந்தி நடிகைகள் தபு, ஜெயபிரதா, மாதுரி தீக்ஷித், ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன், சரிகா, தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், பட தயாரிப்பாளர்கள் கரன் ஜோகர், பரா கான், நடிகர் பரா அக்தர், முன்னாள் எம்.பி. அமர்சிங், இயக்குனர் சந்திரா உள்பட ஏராளமானவர்கள் வந்து ஆறுதல் கூறினார்கள்.

Related Tags :
Next Story