மது குடிக்க பணம் கொடுக்காததால் உறவினர் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர் கைது
குமாரபுரம் அருகே மது குடிக்க பணம் கொடுக்காததால் உறவினர் வீட்டுக்கு தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபுரம்,
தக்கலை அருகே குமாரபுரம், படப்பகுளத்தை சேர்ந்தவர் சாந்தம்மா (வயது 70). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். தற்போது, சாந்தம்மா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது உறவினர் மகன் ரகு (33), கூலி தொழிலாளி. இவர் சாந்தம்மாவின் வீட்டின் அருகே வசித்து வருகிறார்.
ரகுவுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இவர் அடிக்கடி சாந்தம்மாவிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
சம்வத்தன்று, வழக்கம்போல் ரகு மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு சாந்தம்மா தன்னிடம் பணம் இல்லை எனக்கூறினார். இதனால், ஆத்திரமடைந்த ரகு, சாந்தம்மாவின் வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடினார். இதனால் தீ மள..மள..வென வீடு முழுவதும் பரவியது.
இதைப்பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டின் மேற்கூரை முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுவை கைது செய்தனர்.

Related Tags :
Next Story