பாதி எரிந்த நிலையில் வாலிபர் பிணம்
கலசபாக்கம் செய்யாற்றில் பாதி எரிந்த நிலையில் வாலிபர் பிணம் தண்ணீரில் மிதந்து உள்ளது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசபாக்கம்,
கலசபாக்கம் செய்யாற்றின் குறுக்கே பெரிய மேம்பாலம் உள்ளது. இதன் கீழே பள்ளத்தில் தண்ணீர் தேங்கி பாசிகள் படர்ந்த நிலையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை ஒரு வாலிபர் பிணம் உடல் முழுவதும் அழுகி தண்ணீரில் மிதந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கலசபாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கலசபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ்சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பாலாற்றில் இறந்து கிடந்தவர் வாலிபர் என்பதும், உடல் பாதி எரிந்த நிலையில் உள்ளதாகவும் தெரிய வந்தது.
மேலும் முன்விரோத காரணத்தாலோ அல்லது காதல் தகராறில் யாராவது அடித்து கொலை செய்து தீவைத்து எரித்து செய்யாற்றில் போட்டு இருக்கலாம் என்றும், ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டு இருந்தபோது அந்த உடல் தண்ணீரில் அடித்து வந்து பாலத்தில் உள்ள பாறைகளுக்கு அடியில் சிக்கி இருக்கலாம் என்றும் தற்போது தண்ணீர்வரத்து நின்று விட்டதால் உடல் தண்ணீரில் மிதந்து உருக்குலைந்து அழுகிய நிலையில் வெளியே வந்துள்ளது என்று போலீசார் கூறினர்.
இதையடுத்து போலீசார் நேற்று மாலை அந்த உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர்.
மேலும் இது குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story