ஆசிரியர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு
வந்தவாசி அருகே ஆசிரியர் வீட்டில் 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வந்தவாசி,
வந்தவாசி அருகே ஒசூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 38). இவர் இந்த கிராமத்தின் அருகில் உள்ள காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரத்தி கிராமத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இது தவிர பால் வியாபாரமும் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் குமார் பள்ளிக்கு சென்று விட்டார், இவருடைய மனைவி விவசாய வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் குமாரின் தாயார் பச்சையம்மாள் மட்டும் இருந்தார். மதியம் பச்சையம்மாள் வீட்டை பூட்டிக்கொண்டு சாப்பிடுவதற்காக பக்கத்தில் உள்ள தனது மற்றொரு மகன் வெங்கடேசன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சிறிதுநேரத்திற்கு பின் வெங்கடேசனின் மனைவி வீட்டை விட்டு வெளியே வந்தபோது, குமார் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த வாலிபரின் அருகே சென்று நீங்கள் யார், இங்கு ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர் குமார் வீட்டில் பால் வாங்க வந்தேன் என்றுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லை என வெங்கடேசனின் மனைவி சொல்லி கொண்டிருந்தபோது குமார் வீட்டில் இருந்து மற்றொரு வாலிபர் வேகமாக கதவை திறந்தபடி வெளியில் ஓடி வந்து மோட்டார் சைக்கிளில் 2 பேரும் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசனின் மனைவி குமாரின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைத்து திறக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் நகை, ரூ.48 ஆயிரம், அரைகிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரிந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து இருப்பதும் தெரிந்தது. நகைகளின் மதிப்பு ஏறத்தாழ ரூ.2 லட்சம் இருக்கும்.
இதுகுறித்து குமார் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ரவி மற்றும் போலீசார் விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து நகை, பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story