நவ்லாக் பண்ணையில் உதவி வேளாண்மை அதிகாரி மர்மச்சாவு போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை அருகே நவ்லாக் பண்ணையில் உதவி வேளாண்மை அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சிப்காட் (ராணிப் பேட்டை),
சென்னையை அடுத்த திருவள்ளூர் மணவாளநகர் பகுதியை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 53), இவர் ராணிப்பேட்டை அருகே உள்ள நவ்லாக் அரசு பண்ணையில் உதவி வேளாண்மை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இதனால் நவ்லாக் பண்ணை குடியிருப்பில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை தணிகாசலத்தை எழுப்ப பண்ணையில் வேலை பார்க்கும் தினக்கூலி தொழிலாளி குணசேகரன் என்பவர் சென்றபோது தணிகாசலம் படுக்கையிலேயே பிணமாக கிடப்பது தெரிய வந்தது.அவருக்கு அருகிலேயே விஷம் உள்ள பாட்டிலும் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் மர்மச்சாவாக வழக்குப்பதிவு செய்து, தணிகாசலம் இறந்ததற்கான காரணம் என்ன? விஷம் குடித்தாரா? அல்லது வேறு காரணத்தினால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story