ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகை
ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டம்
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூரை சேர்ந்த பெண்கள் பெரும்பாலானோர் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். இதில் 160 பேருக்கு தமிழக அரசு சார்பில் வீடு கட்டுவதற்கு இலவச பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 80 பேருக்கு இலவச பட்டா வழங்கியுள்ளனர். மீதி பேருக்கு பட்டா வழங்க காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
எனவே வழங்கப்பட்ட பட்டாக்களை அளவை செய்யுமாறும், வழங்கப்படாத பீடி தொழிலாளர்களுக்கு பட்டா வழங்கக்கோரியும் ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர். ஆனால் இதுசம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விவசாய சங்கத்தினர் நேற்று ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சுமார் 50–க்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் கலந்துகொண்ட இந்த போராட்டத்துக்கு, விவசாய சங்க மாவட்ட தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். மேலும் எதிர்ப்பு பதாகைகளை கொண்டு வந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் துரைப்பாண்டி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி 2 நாட்களுக்குள் வழங்கப்பட்ட பட்டாவை அளக்க ஏற்பாடு செய்கிறோம் என கூறியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story