நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் ரெயிலில் கட்டண சலுகை வழங்க வலியுறுத்தல்


நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் ரெயிலில் கட்டண சலுகை வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Feb 2018 3:00 AM IST (Updated: 28 Feb 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் கட்டண சலுகை வழங்க வலியுறுத்தி நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

ரெயிலில் கட்டண சலுகை வழங்க வலியுறுத்தி நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். அரசமுத்து முன்னிலை வகித்தார். செயலாளர் குமாரசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ரெயிலில் சலுகை

பாசஞ்சர் ரெயில் உள்பட அனைத்து ரெயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும். ரெயில் பயணத்தின் போது சலுகை கட்டணத்துக்கு மாநில அரசு வழங்கும் அடையாள அட்டை அல்லது மத்திய அரசு வழங்கும் அடையாள அட்டை ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கரசுப்பு, காசி, கங்காதரன், அகத்தியராஜன், ஆத்தியப்பன், இசக்கிராஜன், மரியகொரட்டி, செல்வசுந்தரி, செந்தில், அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story