ஈரோட்டில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


ஈரோட்டில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Feb 2018 3:30 AM IST (Updated: 28 Feb 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பவானி,

ஈரோடு ஆர்.என்.புதூர் அமராவதி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரகுமார். லாரி டிரைவர். இவருடைய மனைவி தாமரைசெல்வி. இவர்களுக்கு துசாந்த், நவநீதகிருஷ்ணன் (வயது 17) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் துசாந்த் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நவநீதகிருஷ்ணன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.

அவருடைய பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மாணவர்கள் ஒரு சிலர் நவநீதகிருஷ்ணனை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனை அடைந்து உள்ளார்.

இந்தநிலையில் நேற்று நவநீதகிருஷ்ணன் பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை. ராஜேந்திரகுமார் வேலை விஷயமாக ராஜஸ்தான் மாநிலம் சென்றுவிட்டார். தாமரைசெல்வி ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு கடைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். துசாந்த் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். எனவே நவநீதகிருஷ்ணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். ஏற்கனவே மனவேதனையுடன் காணப்பட்ட அவர் தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து பார்த்தனர். உடனடியாக அவர்கள் தூக்கில் இருந்து நவநீதகிருஷ்ணனை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே நவநீதகிருஷ்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story