278 பயனாளிகளுக்கு ரூ.29½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
நாகையில், 278 பயனாளிகளுக்கு ரூ.29½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கோபால் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 217 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும், மீன்வளத்துறை சார்பில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்ட 26 மீனவர்களுக்கு சிறையில் இருந்த காலத்திற்கு தின உதவித் தொகையாக ரூ.5 லட்சத்து 77 ஆயிரத்து 250-க்கான காசோலைகள், உதவி ஆணையர்(கலால்) சார்பில், மதுப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் குடும்பத்தை சேர்ந்த 33 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பலான விலையில்லா தையல் எந்திரங்கள் மற்றும் பணியில் இருந்த போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 2 பேருக்கு கருணை அடிப்படையிலான கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி ஆணைகள் என மொத்தம் 278 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திர மோகன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வேலுமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story