அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் வெங்கடேஷ் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில், வருகிற 2–ந்தேதி(வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியலை கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
அம்மா திட்ட முகாம்
தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் அம்மா திட்டம். இந்த திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 2–ந்தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
தூத்துக்குடி தாலுகாவில் தூத்துக்குடி பகுதி–2 கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் அணியாபரநல்லூர் கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகாவில் குலசேகரன்பட்டினம் கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகாவில் மீரான்குளம் பகுதி–1 கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் சிவந்திபட்டி கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகாவில் பட்டிதேவன்பட்டி கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகாவில் என்.புதுப்பட்டி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்திலும், கயத்தாறு தாலுகாவில் தீத்தாம்பட்டி கிராமத்திலும் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
கோரிக்கை மனுக்கள்
இந்த முகாம்களில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு– இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story