பட்டாபிராமில் மாற்றுப்பாதை அமைக்காமல் நடைபெறும் மேம்பால பணியால் போக்குவரத்து பாதிப்பு
பட்டாபிராமில் மாற்றுப்பாதை அமைக்காமல் நடைபெறும் ரெயில்வே மேம்பால பணியால் அந்த பகுதியில் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஆவடி,
ஆவடியை அடுத்த பட்டாபிராமில் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையின் குறுக்கே ரெயில்வே கேட் உள்ளது. சென்னை, ஆவடி, அம்பத்தூர், செங்குன்றம், திருவள்ளூர், அரக்கோணம், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த சாலை வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகின்றன.
சென்னை சென்டிரலில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரெயில் நிலையத்துக்கு மின்சார ரெயில்கள் வந்து செல்லும்போது, இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டுவிடும். இதனால் தினமும் 38 முறை ரெயில்வே கேட் மூடப்பட்டு, மீண்டும் திறக்க சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆகும்.
அந்த நேரங்களில் சாலையின் இருபுறமும் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் முந்திச்செல்லும் அவசரத்தில், ரெயில்வே கேட் மீது மோதி விடுவதால் ரெயில்வே கேட் சேதம் அடைந்து, அதை சரிசெய்வதற்குள் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடும்.
தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் அவசரத்துக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்தில் செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை-திருப்பதி செல்ல இந்த சாலைதான் முக்கியமானது. வேறு வழி இல்லாததால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்துத்தான் சென்று வரவேண்டும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த ரெயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில் ரூ.38 கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட 2011-ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் மண் பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ மேம்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு தமிழக அரசு மொத்தம் ரூ.52.11 கோடியில் மேம்பாலம் அமைக்க ஒப்புதல் அளித்தது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ரெயில் தண்டவாளம் அமைந்துள்ள இடத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் 380 மீட்டர் நீளமும், ஆவடி சாலையில் 206 மீட்டர் நீளமும், தண்டவாளம் பகுதியில் 54 மீட்டர் நீளமும் என மொத்தம் 640 மீட்டர் நீளம், 24 மீட்டர் அகலத்தில், 17 தூண்கள் கொண்டு மேம்பாலம் அமைக்கவும், இந்த பணியை 18 மாதத்தில் செய்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரெயில் தண்டவாளம் பகுதியில் மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்க பள்ளம் தோண்டும் பணியும், இரும்பு கம்பிகள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் கற்களை கொண்டு தடுப்பு அமைத்து உள்ளனர். இதனால் சாலை மேலும் குறுகி உள்ளது.
மாற்றுப்பாதை அமைக்காததால் வாகனங்கள் அனைத்தும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன. இதனால் மிலிட்டரி சைடிங் பகுதிக்கு மின்சார ரெயில் சென்று வரும்போது கேட் அடைக்கப்படும் நேரத்தில் வழக்கத்தைவிட கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ரெயில்வே கேட் திறக்கப்பட்ட பிறகும் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல வேண்டியது இருப்பதால் ரெயில்வே தண்டவாளம் பகுதியை கடந்து செல்லவே பலமணி நேரம் ஆகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே ரெயில்வே மேம்பாலம் பணி முடிவடையும் வரை, வாகனங்கள் சென்று வர மாற்றுப்பாதை ஏற்படுத்தி தரவேண்டும். அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags :
Next Story