திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை
திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை சுற்றுலா வேன் டிரைவர்கள் முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் நகர சுற்றுலா வேன் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம், மணவாளநகர் கணேசபுரத்தில் உள்ள தென்னிந்திய கார், வேன் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் திருவள்ளூர் மற்றும் மணவாளநகர் பகுதிகளில் சுற்றுலா வேன் மற்றும் கார்களை வைத்து ஓட்டி வருகிறோம்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மணவாளநகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சுற்றுலா வாகனங்களில் கண்ணாடியை உடைத்து அதிலுள்ள டி.வி. செட்டுகள் மற்றும் ஒலி பெருக்கியை திருடும் சம்பவம் தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து நாங்கள் மணவாளநகர் போலீசில் புகார் அளித்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை சுற்றுலா வேன்களில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட டி.வி.க்களும், ஒலி பெருக்கிகளும் திருட்டுப்போனது.
மேலும் கடந்த 23-ந் தேதி அன்று மணவாளநகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சுற்றுலா வேன் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் டி.வி.யை திருடிக்கொண்டிருந்த சமயத்தில் அங்கிருந்தவர்கள் பார்த்து அவர்களை விரட்டி சென்றோம்.
அப்போது திருட வந்த 5 பேர் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் ஒருவரை கையும் களவுமாக பிடித்து மணவாளநகர் போலீசில் ஒப்படைத்தோம்.
போலீசார் அவரை விசாரித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.
எனவே திருவள்ளூர் மற்றும் மணவாளநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிடிபட்டவரிடம் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்துவிட்டு சென்றனர்.

Related Tags :
Next Story