பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக- ஆந்திர அரசுகள் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தன. அதன்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடவேண்டும். இதன்படி கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. முதலில் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டனர்.
பின்னர் 2 ஆயிரத்து 450 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனால் பூண்டி ஏரிக்கு சராசரியாக வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர்தான் வந்து சேர்ந்தது. ஆந்திராவில் உள்ள விவசாயிகள் டீசல் மோட்டார்கள் வைத்து தண்ணீர் திருடுவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி 53 டீசல் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதாவது தமிழக எல்லை ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வினாடிக்கு 501 கனஅடி வீதமும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 30.95 அடியாக பதிவானது. 1,968 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு நேற்று முதல் பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Related Tags :
Next Story