திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய ஆட்டோ டிரைவர் கைது


திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2018 2:00 AM IST (Updated: 28 Feb 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

விளாத்திகுளம்,

எட்டயபுரத்தில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ஆட்டோ டிரைவர்

எட்டயபுரம் நடுரோட்டு தெரு மணி காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் வரமூர்த்தி. இவருடைய மகன் செல்வகுமார் (வயது 23). ஆட்டோ டிரைவர். எட்டயபுரம் அருகே இளம்புவனத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண், கோவில்பட்டியில் உள்ள பேன்சி கடையில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து அந்த பெண் ஊருக்கு செல்வதற்காக, எட்டயபுரம் பஸ் நிலையம் வந்து சென்றபோது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து 2 பேரும், கடந்த ஓராண்டாக எட்டயபுரம் பகுதியில் பல்வேறு இடங்களுக்கு உல்லாச பயணம் சென்று உள்ளனர். அப்போது, அவரை திருமணம் செய்து கொள்வதாக செல்வக்குமார் ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதை நம்பி, அவருடைய ஆசைகளுக்கு அந்த இளம்பெண்ணும் இடம் கொடுத்து உள்ளார். இதை பயன்படுத்தி அவர், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

கர்ப்பிணி

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவரை பெற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருடைய உடலை பரிசோதித்த டாக்டர், பெண் கர்ப்பம் அடைந்து இருப்பதாக கூறினர். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பதறியவாறு பெண்ணிடம் அவர்கள் விசாரித்தனர். அப்போது டிரைவர் தன்னை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததை பெண் கூறினார்.

பின்னர் அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமலட்சுமி வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார்.

Next Story