பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை நடைபெறவுள்ள பிளஸ்-2 தேர்வினை 17,341 பேர் எழுதுகின்றனர்
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நாளை நடைபெற உள்ள பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வினை 17,341 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
பெரம்பலூர்,
தமிழகம் முழுவதும் நாளை (வியாழக்கிழமை) பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 4,403 மாணவர்களும், 4,528 மாணவிகளும் என 71 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 8,931 பேர் பிளஸ்-2 தேர்வினை எழுத இருக்கின்றனர். 29 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையங்களுக்கு எழுதில் சென்று வரும் வகையில் பஸ் வசதி, தேர்வு நடைபெறும் இடத்தில் தடையின்றி மின்சார வசதி, மாணவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா வழிகாட்டுதலின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மேலும் 29 முதன்மை கண்காணிப்பாளர்கள், 29 கல்வித்துறை அலுவலர்கள், 7 கூடுதல் துறை அலுவலர்கள், பறக்கும் படையினர் 59 பேர் என பிளஸ்-2 தேர்வு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் உள்ளிட்டவற்றை கொண்டு வருவதற்கும், தேர்வு முடிந்ததும் விடைத்தாளை கொண்டு செல்லவும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கும், ஒவ்வொரு தேர்வு மைய நுழைவு வாயிலிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழிதேவி தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள 72 மேல் நிலைப்பள்ளிகளில் இருந்து 3,851 மாணவர்கள், 4,559 மாணவிகள் என மொத்தம் 8,410 பேர் பிளஸ்-2 தேர்வினை நாளை எழுத உள்ளனர். 30 மையங் களில் இந்த தேர்வு நடை பெறுகிறது. 30 மையங் களுக்கும் மாவட்ட கல்வி அதிகாரி தலைமையில் 30 முதன்மை கண்காணிப்பாளர்கள், 30 துறை அலுவலர்கள், 70 பறக்கும் படை யினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் கொண்டு செல்வதற்கும் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து வருவதற்கும் அரியலூர் கல்வி மாவட்டத்திற்கு 3 வழித்தட அலுவலர்களும், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்கு 6 வழித்தட அலுவலர்கள் என மொத்தம் 9 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுகள் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார். தேர்வு மையங் களில் அடிப்படை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மொத்தம் 17,341 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வினை எழுத இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Related Tags :
Next Story