பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி,
மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு, ரெயில்வே நிர்வாகம் நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி மாநகர், மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட தலைவர் குமார் முன்னிலை வகித்தார். மாநகர், மாவட்ட செயலாளர் கோபிநாத், புறநகர் மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.
ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு டிக்கெட் வாங்குவதற்கு எளிமையான வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். நடைமேடைகளில் இரு சக்கர நாற்காலி வசதி செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி வாகனங்களை நிறுத்துவதற்கு ரெயில் நிலையங்களில் இலவச ‘பார்க்கிங்’ வசதி மற்றும் இலவச கழிப்பிட வசதி, ஓய்வெடுக்கும் அறையை ரெயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும். மாற்றுத்திறனாளி களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரெயில் பெட்டியில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே ஊழியர்களும் ஏறி ஆக்கிரமித்து கொள்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓடும் ரெயிலில் முன்புறமோ அல்லது பின்புறமோ மாற்றுத்திறனாளி பெட்டி ஒதுக்கியுள்ள அறிவிப்பை முன்கூட்டியே ரெயில்வே நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளி நலன் கமிட்டி அமைத்திட வேண்டும். திருச்சி ரெயில் நிலையத்தில் இயங்கும் பேட்டரி காரில் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசும்- ரெயில்வே நிர்வாகமும் நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக மாநகர் மாவட்ட பொருளாளர் புஷ்பநாதன் வரவேற்று பேசினார். முடிவில் புறநகர் மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார். இதனை தொடர்ந்து சங்கத்தின் திருச்சி மாநகர், மாவட்ட தலைவர் ஜெயபால் நிருபர்களிடம் கூறுகையில், “இதே கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி டெல்லியில் ரெயில்பவன் முன்பு மாற்றுத்திறனாளிகளின் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.

Related Tags :
Next Story