கழிவுநீரை சுத்திகரித்து விவசாய பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டம்
சின்னனூர் ஊராட்சியில் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் முதன் முறையாக செயல்படுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சின்னனூர் ஊராட்சியில்
கழிவுநீரை சுத்திகரித்து விவசாய பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டம்
தமிழகத்தில் முதன்முறை என கலெக்டர் ரோகிணி தகவல்
சின்னனூர் ஊராட்சியில் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு வழங்கும் திட்டத்தை கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
சேலம்,
சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் சின்னனூர் ஊராட்சியில் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் ரோகிணி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரேசன், விஜயலட்சுமி, வட்டார உதவி பொறியாளர் ஆனந்த யுவனேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சேலம் மாவட்டத்தில் சின்னனூர் ஊராட்சியில் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. சின்னனூர் ஊராட்சியில் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த 700 குடும்பங்களில் உள்ள கழிவுநீரை சேகரித்து 3 முறை வடிகட்டி அசுத்த வாயுக்களை பிரித்து நீக்கி நாள் ஒன்றிற்கு 14 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்டு 10 ஏக்கர் விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. இத்திட்டம் தாய்திட்டத்தின் மூலம் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 58 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அவ்வூராட்சிகளில் தூய்மை காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களுக்கு தேவையான சீருடை, கையுறை, வாயுறை, விசில், தள்ளுவண்டி, மண்வெட்டி, கடப்பாரை, அன்னக்கூடை, முள்வாங்கி மற்றும் துடைப்பம் போன்ற குப்பை சேகரிக்கும் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
2-ம் கட்டமாக 219 ஊராட்சிகளிலும், 3-ம் கட்டமாக 108 ஊராட்சிகளும் என மொத்தம் 385 ஊராட்சிகளிலும் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தூய்மை பணியினை மேற்கொள்ளும் தூய்மை காவலர்களுக்கான தினசரி கூலித்தொகை ரூ.205 மகாத்மாக காந்தி தேசிய ஊரக உறுதித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
385 ஊராட்சிகளிலும் குப்பை தரம் பிரிக்கும் கொட்டகைகள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 277 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 108 கொட்டகைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. சேகரிப்படும் குப்பைகள் குப்பை சேகரிப்பு கொட்டகைகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு வருகின்றது. மக்கும் குப்பைகள் கொட்டுவதற்கு குப்பை குழிகள் வெட்டப்பட்டு மக்கும் குப்பைகளை அதில் கொட்டி அதன் மூலம் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. மண்புழு உரங்கள் சுய உதவி குழுக்கள் மூலம் கிலோ ரூ.8-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Related Tags :
Next Story