மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலி பெண் உள்பட 4 பேர் படுகாயம்
கோட்டைப்பட்டினம்,
மணமேல்குடி அருகே உள்ள பிச்சனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 35). இவரது உறவினர் ஹரிகரன் (20). இவர்கள் 2 பேரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில், பிச்சனேந்தலில் இருந்து கோட்டைப்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே காரைக்குடியில் இருந்து வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஏசுதாஸ், ஹரிகரன், காரில் வந்த காரைக்குடியை சேர்ந்த சண்முகநாதன் (35), அவரது சகோதரி சுப்புலெட்சுமி (28), உறவினர் சஞ்சய் (15) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கோட்டைப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஏசுதாஸ், ஹரிகரன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஏசுதாஸ் இறந்தார். தொடர்ந்து சண்முகநாதன், சுப்புலெட்சுமி, சஞ்சய் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் சண்முகநாதன், ஹரிகரன் ஆகியோரின் கால் முறிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story