தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் அமைச்சர் காமராஜ் பேச்சு


தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் அமைச்சர் காமராஜ் பேச்சு
x
தினத்தந்தி 28 Feb 2018 4:15 AM IST (Updated: 28 Feb 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

5 ஆண்டுகளை நிறைவு செய்து தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை அமைக்கும் என திருவாரூரில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் பனகல் சாலையில் நகர அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் பாலாஜி, ரெயில்பாஸ்கர், அவைத்தலைவர் அருண்நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளரும், உணவு துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம், சேலை மற்றும் மரக்கன்றுகள் ஆகியவற்றை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மீண்டும் ஆட்சி அமைக்கும்

அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. 5 ஆண்டுகளை நிறைவு செய்து மீண்டும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொள்ளை புறமாக ஆட்சிக்கு வர நினைக்கிறார். தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் அமல் படுத்தப்பட்ட பின்பு இலவச அரிசி வழங்கப்படும் ஒரே மாநிலம் தமிழகம் தான். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் பாப்பாத்திமணி, மாவட்ட மாணவரணி செயலாளர் விஜயராகவன், மாவட்ட விவசாய அணி பொருளாளர் சூரியசாமி, நகர சிறுப்பான்மை பிரிவு செயலாளர் முகமதுகஜ்ஜாலி, நகர பாசறை செயலாளர் சசி, நகர எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் சந்திரகுப்தன், வார்டு பிரதிநிதி முத்துமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள் வரவேற்றார். முடிவில் நகர எம்.ஜிஆர். மன்ற செயலாளர் துரை நன்றி கூறினார்.


Next Story